வரலட்சுமி பூஜை 31/07/2020

அடியார்களுக்கு வணக்கம்,

இவ்வருடம் 31/07/2020 வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையில் பங்கேற்க உள்ள அடியார்கள் தம் வரவை 0619804485 என்னும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய அறிவித்தல்

அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அடியார்களுக்கு,

இவ்வாண்டு 2020 மஹோற்சவ காலத்தின்போது கொரோனா (COVID 19) நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக ஆலயத்திற்குள் ஒரேநேரத்தில் 15 அடியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் அன்றைய உபயகாரர்களுக்கு பூஜை நேரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன்பின்னர் ஏனைய அடியார்கள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ பூஜையை தொடர்ந்து ஏனைய மெய்யடியார்கள் 15 பக்தர்கள் வீதம் ஆலய வழிபாட்டிற்கும் அர்ச்சனைக்கும் மதிய பூஜையின் பின்னர் 2 மணிவரையும், இரவு பூஜையின் பின்னர் 8.30மணிவரையும் அனுமதிக்கப்படவுள்ளனர். அடியார்கள் ஆலயத்துள் சமூகஇடைவெளியை பேணுவது கட்டாயமாகும். உங்கள் வரவை முன்கூட்டியே 0619804485 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தரல் வரவேற்கப்படுகிறது.

நன்றி.

-ஆலய பரிபாலனசபை.

ஆடிஅமாவாசை 20/07/2020

ஆடி அமாவாசை 20/7/2020 திங்கள் அன்று ஆலயமானது காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையும் . மாலை வழமையான நேரத்திற்கும் திறந்திருக்கும். பிதிர்க்கடன் செய்ய விரும்பும் அடியார்கள் இந்த நேரங்களில் முன்னறிவிப்புடன் ஆலயத்திற்கு வரலாம் என்பதை அறியத் தருகிறோம்

தமிழ் புத்தாண்டு -2020

புத்தாண்டினை முன்னிட்டு அர்ச்சனை, பாலபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
புத்தாண்டுப் பூஜையை மாலை 3.30இலிருந்து Face book இல் Live ஆகப் பார்க்கலாம்.
தொடர்புகளுக்கு 0619804485

மருத்துநீர் 12/04/2020

மருத்து நீர் எடுக்க விரும்பும் அடியார்கள் இன்று மாலை 5 மணிக்குப் பின் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் வரும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு 0619804485

அன்னாபிஷேகம் 12-11-2019

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

 

அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

சிறப்புகள் பல நிறைந்த இந்த அன்னாபிஷேகமானது 12/11/2019 செவ்வாய் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தில் ஆரம்பமாகும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகிறோம்.

சனிப் பிரதோஷம் 9-11-2019

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. நாளை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுப் பூஜைகள் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்

ஆனிஉத்தரம் 08-07-2019

08/07/2019 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஆனி உத்தரத்தை முன்னிட்டு விஷேட அபிஷேகம் மற்றும் நடராச தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் இத்தினத்தில் ஆலய தரிசனம் செய்து உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்