எதிர்வரும் சனிக்கிழமை 18/11/2023 அன்று மாலை 4 மணிக்கு எமது ஆலயத்தில் சூரன்போர் இடம்பெற இருக்கிறது. இச்சமயத்தில் அடியார்கள் அனைத்து அடியார்களும் ஆலயத்துக்கு வருகை தந்து உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.தொடர்ந்து 19/11/2023 அன்று மாலை 5 மணியளவில் முருகன் திருக்கல்யாண வைபவம் இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
அன்னாபிஷேகம் (28/10/2023)
கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.இத்தகைய சிறப்பு மிக்க அன்னாபிஷேகமானது நாளை நம் ஆலயத்தில் வரும் சனிக்கிழமை (28/10/2023) மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. அடியார்கள் பூஜையில் கலந்து கொண்டு அருள்பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய அறிவிப்பு
இந்த வருடம் ஆலயத்தில் ( இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்ட) புதிய சித்திரத்தேரில் எம்பிரான் திருவீதி உலா வர இருக்கிறார். எனவே அடியார்கள் எம்பெருமானின் அற்புத, ஆனந்த ரத பவனியைக் கண்டு உய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
மஹோற்சவப் பெருவிழா 29/7/2023 முதல் 9/8/2023 வரை

Temple Annual Festival 28/07/2023- 10/08/2023

சோபகிருது வருடப்பிறப்பு 14/04/2023

பங்குனி உத்தரம் கல்யாணத் திருவிழா 04/04/2023.

சனிப்பிரதோஷம் 04/03/2023

மணவாளக்கோலவிஞ்ஞாபனம்

மஹாசிவராத்திரி 2023
