கேதாரகௌரி விரதம்

திருச்சிற்றம்பலம்! அன்பார்ந்த சிவன் அடியார்களே நமது ஆலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 31 .10. 2024 தீப ஒளி திருநாளும் அதனைத் தொடர்ந்து கேதார கௌரி விரத பூஜையின் காப்பு கட்டு வைபவமும் ஆலயத்தில் நடைபெற உள்ளன. வியாழன் காலை 10 மணி அளவில் அருணாசலேஸ்வரருக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று 12 மணி அளவில் பூஜை இடம் பெறும். அதனைத் தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருந்து கேதார கௌரி விரத பூஜையில் அம்பிகைக்கு அபிஷேகம் நடைபெற்று காப்பு கட்டும் வைபவம் நடைபெறும். இத்தருணம்அடியார்கள் தவறாது வருகை தந்து எல்லாம் வல்ல பார்வதி பரமேஸ்வரனின் திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் வாழ்க வையகம்! வளர்க சைவம்!தீப ஒளி திருநாள் உபயம்.சண்முகராசா ( ராஜன்) குடும்பம்Arunachaleshwara temple Netharland 0031 6198044850031 687444387

Diwali 31/10/2024

OM NAMA SHIVAYA!!! To all the devotees of Lord Shiva,On Thursday 31 .10. 2024, we are celeberating Diwali at our temple with special pooja which commence from 10 am with special abhishekam to Shivling and the pooja will start from 12 noon. Same day in the evening at 5:30 pm Ketara Gauri Vrat Pooja will start with special abhishekam to Goddes Gauri. We cordially invite all the devotees to come and receive the divine blessing of maa Bharrvati and Parameswar.Sponsers for Diwali: Shanmugarasa (Rajan) family Arunachaleshwara temple Netherland 0031 619804485 0031 687444387

26/10/2024 Ongerlamp Deepa

We would like to inform the devoties that coming Saturday 26. 10. 2024 at 6 pm at Arunasaleshwarar Temple, 108 Ongar Lamp Deepa Pooja will be held every month followed by the 18 step Puja of Ayyappan and will be completed with Maheswara Puja. We invite Om Trichitambalam. Arunachaleshwara temple. Netherland 0031619804485 0031687444387

Ganapati Homan&Ayyappan Abhishekam

Trichiratambalam! We would like to inform the servants that next Friday will start with Ganapati Homam at 5 pm and next Saturday at 9 am at Arunachaleswarar Temple, Kumbabishekam of Sabarimala Ayyappan will be held followed by Puja according to special order. Note: 18. 10. 20204 Friday at 6 PM to Ayyappan Balabhishekam will be performed by the hands of servants. Arulmigu Arunachaleshwarar Aalayam Netherland 0031619804485 0031687444387

விஜயதசமி 12/10/2024

அன்பார்ந்த சிவனடியார்களே! நமது ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 12. 10 .2024 அன்று விஜயதசமி முன்னிட்டு காலை 9 மணி முதல் ஆலயத்தில் ஏடு துவக்கம் வைபவம் நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம். அதனைத் தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் வாழை வெட்டும் வைபவம் நடைபெற்று சுவாமி வெளிவீதி விழா சுற்றி வந்து அபிஷேகம் நடைபெற்று வசந்தமண்டப பூஜையுடன் கேதார கௌரி விரதம் ஆரம்பிக்கப்படும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம் அனைவரும் வருகை தந்து எல்லாம் வல்ல உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வரரின் அருளை பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். திருச்சிற்றம்பலம்!Arulmigu Arunachaleshwarar Aalayam Elbesteraat 1946Xh Beverwijk Netharland 0031( 0)619804485

ஓங்கார தீபம் 28/09/2024

அன்பார்ந்த சிவனடியார்களே வருகின்ற சனிக்கிழமை பகல் 12 மணியளவில் ஆலயத்தினுடைய மாதந்தோறும் நடைபெறுகின்ற 108 ஓங்கார தீபமும் புரட்டாசி சனிக்கிழமை பூஜையும் நவக்கிரகத்திற்கு எள்ளு தீப பூஜையும் நடைபெறும் அடியார்கள் கலந்து கொண்டே பார்வதி பரமேஸ்வரன் உடைய திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் ஓம் சிவ சிவ ஓம்!திருச்சிற்றம்பலம்!

விநாயகர் சதுர்த்தி 06/09/2024

அன்பார்ந்த! சிவனடியார்களே!எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6.09.2024 மாலை 5 மணியளவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயக பெருமானுக்கு விசேஷ ஹோமங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி உள்வீதி உலா வரும் காட்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.அத்தரணம் அடியார்கள் அலைகடலாக வருகை தந்து எல்லாம் வல்ல முழு முதல் கடவுளான விநாயக பெருமானின் அருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்க தருகின்றோம் வாழ்க வளர்க!உபயம்:- விக்னேஸ்வரன் கௌரி குடும்பம்

சனிப் பிரதோஷம் 31/08/2024

ஓம் சிவ சிவ ஓம்!அன்பார்ந்த சிவனடியார்களே!எதிர்வரும்(31.08.2024) சனிக்கிழமை மாலை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் 5.30மணியளவில் விஷேட்பிஷேகம் நடைபெறும் அதனைத்தொடர்ந்து 108 ஓம்விளக்கு சுவாமி உள் வீதி வலம் வரும் காட்சியும் நடைபெறும்.உபயம்.ராஜினி‌லோகேஸ்வரன் குடும்பம்.

Varalakshmi puja 16/08/2024

On Friday 16/08/2024 at 5 PM, Varalakshmi Fasting Puja is going to be held at the Ambika Sametha Arunachaleswarar Temple, followed by street crawling in Ambal. We invite the devotees who complete the Maheswara Pooja without fail to attend and receive the blessings of Ashta Aishwarya Lakshmi. Arunachaleswarar Temple Paperburg Netherlands 0031 619804485

வரலட்சுமி நோன்பு பூஜை 16/08/2024

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16/08/2024 மாலை 5 மணி அளவில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு பூஜை விமர்சையாக நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து அம்பாள் உள் வீதி வலம் வரும் காட்சி நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும் அடியார்கள் தவறாது கலந்து கொண்டு அஷ்ட ஐஸ்வர்ய லட்சுமி அருள் கடாட்சத்தை பெற்றியும் வண்ணம் அழைக்கின்றோம் அருணாசலேஸ்வரர் ஆலயம்பேபர்பர்க்நெதர்லாந்து0031 619804485