ஆங்கிலப் புத்தாண்டு 2025

அன்பார்ந்த சிவனடியார்களே,2025 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நமது ஆலயத்தில் விசேட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.காலை 10 மணியளவில் விசேட ஹோமங்கள் நடைபெறும். பின்னர், 11:30 மணிக்கு மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் நடத்தப்படும். தொடர்ந்து புத்தாண்டு விஷேட பூஜை மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும்.அன்றைய தினம் ஆலயம் காலை 10 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.எல்லாம் வல்ல அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரரின் அருளை பெற, அனைவரும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.திருச்சிற்றம்பலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *