கேதாரகௌரி விரதம்

திருச்சிற்றம்பலம்! அன்பார்ந்த சிவன் அடியார்களே நமது ஆலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 31 .10. 2024 தீப ஒளி திருநாளும் அதனைத் தொடர்ந்து கேதார கௌரி விரத பூஜையின் காப்பு கட்டு வைபவமும் ஆலயத்தில் நடைபெற உள்ளன. வியாழன் காலை 10 மணி அளவில் அருணாசலேஸ்வரருக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று 12 மணி அளவில் பூஜை இடம் பெறும். அதனைத் தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருந்து கேதார கௌரி விரத பூஜையில் அம்பிகைக்கு அபிஷேகம் நடைபெற்று காப்பு கட்டும் வைபவம் நடைபெறும். இத்தருணம்அடியார்கள் தவறாது வருகை தந்து எல்லாம் வல்ல பார்வதி பரமேஸ்வரனின் திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் வாழ்க வையகம்! வளர்க சைவம்!தீப ஒளி திருநாள் உபயம்.சண்முகராசா ( ராஜன்) குடும்பம்Arunachaleshwara temple Netharland 0031 6198044850031 687444387

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *