பங்குனி உத்திரம் 18/03/2022

அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம்!நாளை மாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற இருக்கிறது. அடியார்கள் இவ்விழாவில் பங்குகொண்டு எம்பெருமான் அருளைப் பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.ஆலயமானது மாலை 5.30 மணியில் இருந்து திறந்திருக்கும் என்பதை அறியத்தருகிறோம்.

மகாசிவராத்திரி 28/2/2022

வரும் 28/2/2022 திங்கட்கிழமை மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தில் மாலை 5.30 மணியளவில் அபிஷேகத்துடன் பிரதோஷ பூஜைகள் ஆரம்பமாகும். முதலாம் ஜாமப் பூஜையானது மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும். இப்பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு அடியார்கள் சிவனருள் பெற்று உய்யுமாறு அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.