ஆரூத்ரா தரிசனம்..

அடியார்களே வரும் 23.12.2018 அன்று திருவெம்பாவை கடைசி நாளை முன்னிட்டு ஆலயத்தில் காலை 6  மணியளவில் நடேசரபிஷேகம், வீதியுலா, ஆரூத்ரா தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் தவறாது கலந்துகொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…..

22/11/2018 கார்த்திகைதீபம்

அருள்மிகு உண்ணாமுலை நாயகி ஸமேத அருணாச்சலேஸ்வரர் அடியார்களே!
நிகழும் சுபமங்களகரமான விளம்பி வருடம் கார்த்திகை மாதம்,22/11/2018 வியாழக்கிழமை இருளை அகற்றி இன்ப ஒளி தரும் கார்த்திகை தீப வழிபாட்டுப் பூசை ‌மாலை 6.00 மணிக்கு அண்ணாமலையார் தீபம் நடைபெறுவதால் அத்தருணம் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரரின் திருவருளைப் பெற வேண்டுகிறோம்.
சுபம்.

Karthikai Deepam Poojai begins on 6.00 pm on 22/11/2018 .

Everyone is welcome to come and pray!

14.11.2018 திருக்கல்யாணம்

வரும் 14.11.2018 அன்று முருகன் திருக்கல்யாணமானது பொது உபயமாக நடைபெற உள்ளது. இதற்குப் பங்களிப்புச் செய்ய விரும்பும் அடியார்கள் 0619804485 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்…

Murugan heilig huwelijk is in de komende 14.11.2018 contact met de 0619804485 van de bedienden die hieraan willen bijdragen…

கௌரி விரதப் பூஜைகள்

7.11.2018 அன்று கௌரி விரதப் பூஜைகள் மாலை 5.30மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம். மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரை அணுகவும்.

தீபாவளி 2018

நாளை தீபாவளியை முன்னிட்டு ஆலயமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையும் திறந்திருப்பதோடு மாலை 7 மணிக்கு விசேட பூஜை இடம்பெறும் என்பதையும் அறியத்தருகிறோம்

குரு இடப்பெயற்சி

 

அருள்மிகு உண்ணாமுலை நாயகி ஸமேத அருணாச்சலேஸ்வரர் அடியார்களே குரு பார்வை கோடி நன்மை.நிகழும் சுபமங்களகரமான விளம்பி வருடம் புரட்டாதி மாதம்.18ம் நாள்4/10/2018.வியாழக்கிழமை குருவாரம் மாலை
குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருட்சிக ராசியில் இடப்பெயற்சி ஆவதை முன்னிட்டு குரு பகவானுக்கு விஷேடஹோமம் மாலை 5:00pmக்கு மேல் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது அத்தருணம் அடியார்கள் அனைவரும் கலந்துகொன்டு குருவின் திருவருளை பெறவேண்டுகிறோம். குறிப்பாக: 1.விருட்சிகராசி.2.மேடராசி.3.கும்பராசி.4.மிதுனராசி.5.சிம்மராசி.6.கன்னிராசி.7.தனுசுராசிகாரர்கள் தவறாதுகலந்து கொண்டு தங்களுக்குரிய தோஷபரிகாரங்களைச் செய்து குருபகவானின் திருவருள் பெறவேண்டுகிறோம்.சுபம்