ஆங்கில புத்தாண்டு 01/01/2022 பூசை

அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரின் அடியார்களே,வரும் ஆங்கில புதுவருட தினத்தன்று(01-01-2022) காலை 1100 மணிக்கு அபிசேகம் ஆரம்பித்து 12.00 மணிக்கு பூசை நடைபெறும். அடியார்கள் 11.00 மணி முதல் ஆலயத்திற்கு வருகை தந்து அர்ச்சனை செய்யலாம். வர விரும்பும் அடியார்கள் நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு முன்கூட்டியே உங்கள் வருகையை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆலயத்திற்குள் வரும் போது முகக்கவசம்(mondkapje) அணிந்து வரவும். 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.நன்றிஆலய நிர்வாகசபை

அன்னாபிஷேகம் 20/10/2021 மாலை 6:30

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.
அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.
அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.இத்தகைய சிறப்பு மிக்க அன்னாபிஷேகமானது நாளை நம் ஆலயத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அடியார்கள் பூஜையில் கலந்து கொண்டு அருள்பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

18/9/2021 புரட்டாதிசனி/பிரதோஷம்

எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை புரட்டாதிச் சனி விரதமும் சனி மஹா பிரதோஷமும் ஒருங்கே இடம்பெற இருப்பதால் ஆலயமானது அடியார்கள் வழிபாட்டிற்காக காலை 9.30 மணியிலிருந்து திறந்திருக்கும். அத்துடன் மதியம் 12 மணிக்கு விஷேட ஹோமமும் மாலை 5.30 மணிக்கு சனிப்பிரதோஷ அபிஷேக வழிபாடுகளும் இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம். உபயம்: திரு. திருமதி ஜெயக்குமார் குடும்பம்

ஆடிஅமாவாசை 08/08/2021

அன்பான சிவன் அடியார்கட்கு இனிய காலை வணக்கம். நாளை 8/8/2021 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு எமது ஆலயத்தில் மதியம் 12 மணியளவில் விசேட பூசை நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம். ஆலயம் காலை 10 மணியளவில் இருந்து அடியார்களின் பிதிர்க்கடன் வழிபாட்டிற்கு திறந்து இருக்கும். ஓம் சிவாய நமகா🙏

22/6/2021பிரதோஷம்

மாலை 5:30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம்,அதனைத்தொடர்ந்து 6:00 மணிக்கு பிரதோஷபூஜைகள் நடைபெறும்.

தற்காலிக பூஜை நேரமாற்றம்.

கோறோண(corona) ஊரடங்கு காரணமாக ஆலயத்தில் நடைபெறும் நித்திய பூசைகள் தற்காலிகமாக மாலை6மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதோஷ பூஜை மட்டும் மாலை 5:30மணிக்கு ஆரம்பமாகும்.

http://sivatemple.nl/temple-opening-time/

வரலட்சுமி பூஜை 31/07/2020

அடியார்களுக்கு வணக்கம்,

இவ்வருடம் 31/07/2020 வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையில் பங்கேற்க உள்ள அடியார்கள் தம் வரவை 0619804485 என்னும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.